நேரு ஸ்டேடியத்தில் சந்தோஷ் நாராயணனின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

'அட்டக்கத்தி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் முதன்முதலாக இலங்கையில் 'நீயே ஒளி' என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினர். தற்போது அதே நிகழ்ச்சியை இன்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்துகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த ஸ்டேடியத்தில் 'நீயே ஒளி' இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று தீர்மானித்தவுடன் இதன் நிர்வாகத்திலுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கினோம். முதலில் நாங்கள் ரசிகர்கள் வருகைத் தருவதற்கும், அவர்கள் சிரமமில்லாமல் இசை நிகழ்ச்சியைப் பார்த்து ரசிப்பதற்கும், அவர்கள் எதிர்பார்க்கும் வசதிகளைசெய்து கொடுப்பதற்கும் தான் முக்கியத்துவம் அளித்தோம். இதற்காக நாங்கள் கடந்த இரண்டு வாரங்களாக இந்த மைதானத்தில் முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம்.

இந்த இசைநிகழ்ச்சியின் நோக்கம் லாபம் மட்டுமல்ல. ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரவேண்டும் என்பதற்காக விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இது ஒரு கிரீன் கான்செர்ட். நான் மட்டுமல்லாமல் இந்தியாவிலிருந்தும் மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்தும் பல்வேறு திறமையான இசை கலைஞர்கள் மற்றும் நடன கலைஞகள் என பலர் கலந்துகொள்கிறார்கள்.

இந்நிகழ்வில் என்னுடைய இசையில் உருவான பாடல்களுடன் இசைஞானி இளையராஜா, மெல்லிசை மன்னர் எம்எஸ்வி, ஏ.ஆர். ரஹ்மான், ஜீ வி பிரகாஷ் குமார், அனிரூத், யுவன் சங்கர் ராஜா ஆகியோர்களின் பாடல்களும் இடம்பெறும். கான்செர்ட்டின் கிராஃப் கூட எமோஷனலாக இருக்கும்.ஒரு திரைப்படம் போல் எங்கேயும் நிற்காமல் தொடர்ந்து மூன்று மணி நேரம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த கான்செர்ட் நடக்கும். இது ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரசிகர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திரைத்துறையினருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.