சென்னை: பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு இரண்டு வகையான வினாத்தாள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த தேர்வை 7.25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பள்ளிகளில் திருப்புதல் தேர்வு, கூடுதல் நேர வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. […]
