கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மகான்’.
கொள்கைக்கும் நடைமுறை எதார்த்தத்திற்கும் இடையே இருக்கும் முரண்களை, எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் தந்தை – மகன் வழியே ஆக்ஷன் திரில்லர் பாணியில் சொல்லி பார்வையாளர்களின் கவனம் பெற்றது இத்திரைப்படம்.

கோவிட் காரணங்களால் திரையில் வெளியாக வேண்டிய இப்படம் ஓடிடி-யில் வெளியாகியிருந்தது. சந்தோஷ் நாரயணணின் பிண்ணனி இசை, படத்தின் அத்தனைக் கதாபாத்திரங்களும் ஆழமாக உருவாக்கப்பட்டிருந்த விதம், விக்ரம் – துருவின் நடிப்பு என சரியான தியேட்டர் மெட்டீரியலுக்கானத் திரைப்படம்.
இதையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பேச்சுகள் சினிமா வட்டாரத்தில் அடிபட்டன. ஆனால், கார்த்திக் சுப்புராஜ் அடுத்தடுத்தப் படங்களுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் ஜிகர்தாண்ட டபுள் எக்ஸ், ட்ரிப்பில் எக்ஸ் என பிஸியாகிவிட்டார். சமீப நாள்களாக விஜய்யின் 69வது படத்தை இயக்கும் இயக்குநர்களின் பட்டியலில் இருப்பதாகவும் பேச்சுகள் அடிபட்டன.
Mahaan2!!? pic.twitter.com/HTB3uyMtMm
— Vikram (@chiyaan) February 11, 2024
இந்நிலையில் ‘தங்கலான்’ படத்தை முடித்து ‘சித்தா’ பட இயக்குநர் படத்தில் பிஸியாகியுள்ள நடிகர் விக்ரம், ‘மகான்’ படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளாதைக் குறிப்பிட்டு ‘மகான் 2 ?’ என்று கேள்விக் குறியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கூடவே ‘மகான்’ பட லுக்கில் இருப்பது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகான் 2 படத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? மகான் படம் குறித்த உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்