லக்னோ,
ஒவ்வொரு நாட்டிலும் சிறப்பாக விளையாடி ஓய்வு பெற்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்களுக்கான 20 ஓவர் லீக் கிரிக்கெட் தொடர் இந்த வருடம் முதல் நடைபெற உள்ளது. இந்தியன் வெட்ரன் பிரீமியர் லீக் (ஐவிபிஎல்) என்ற பெயரில் நடத்தப்பட உள்ள இந்த தொடரின் முதலாவது சீசன் வரும் 23-ந்தேதி தொடங்கி மார்ச் 3-ந்தேதி முடிவடைய உள்ளது.
இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளன. அவைகள் முறையே தெலங்கானா டைகர்ஸ், மும்பை சாம்பியன்ஸ், ரெட் கார்பெட் டெல்லி, விவிஐபி உத்தர பிரதேசம், ராஜஸ்தான் லெஜண்ட்ஸ் மற்றும் சத்தீஷ்கர் வாரியர்ஸ் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
இதில் பல நாடுகளை சேர்ந்த ஜாம்பவான் வீரர்கள் விளையாட உள்ளனர். டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த தொடர் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் , ரசிகர்களால் ‘சின்ன தல’ என்று அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா விவிஐபி உத்தர பிரதேசம் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.