ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டும் ரைடர்களைக் குறி வைத்து, போலீஸ் அதிகாரிகள் பரபரப்பாக இயங்கி வருவது தெரியும். ஆன் தி ஸ்பாட்டில் பிடிக்க முடியாத வயலென்ட் ரைடர்களை மொபைல் போனில் புகைப்படம் எடுத்து, ஆதாரத்தோடு நமக்கு அனுப்பி அபராதம் விதித்தும் வருகிறார்கள். பிடிபட்ட சில ரைடர்கள் வாக்குவாதம் செய்வார்கள்; சிலர் ‛எதுக்குடா வம்பு’ என்று அபராதத்தைக் கட்டிக் கிளம்பிவிடுவார்கள். ஆனால், அண்மையில் பெங்களூருவில் அப்படி ஹெல்மெட்லெஸ் ரைடர் ஒருவர் தன்னைக் கையும் களவுமாகப் பிடித்த காவல் அதிகாரியின் கையைக் கடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
கையைக் கடித்தவரின் பெயர் சையது ஷஃபி என்று தெரிய வந்திருக்கிறது. 28 வயதான இவர், பெங்களூருவில் காலை 11.30 மணியளவில், தனது வெள்ளை நிற சுஸூகி ஆக்ஸஸ் எனும் ஸ்கூட்டரை ஹெல்மெட் இல்லாமல் ஓட்டி வந்திருக்கிறார். அவரை வழிமறித்த ஹெட் கான்ஸ்டபிள் Sidrameshwara Kaujalagi என்பவர், அவர் நிற்காமல் சென்றதால் தனது செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றிருக்கிறார்.
Syed Sharif biting traffic police in Bengaluru
He was caught riding bike without Helmet
Usually Police don’t ask for helmets to Jali topis in bengaluru pic.twitter.com/IZ9x2o5Iks— Swathi Bellam (@BellamSwathi) February 13, 2024

திடீரென அந்த ரைடர் டூவீலரில் இருந்து இறங்கி வந்து கோபமாக அந்த ஹெட் கான்ஸ்டபிளைப் பார்த்துக் கத்தியிருக்கிறார். “வேணும்னா நம்பர் பிளேட்டைத் தனியா கழட்டித் தர்றேன். தேவையான அளவு நிறைய போட்டோ எடுத்துக்கோங்க!’’ என்றும் நக்கலாகச் சொல்லியிருக்கிறார்.
அதன் பிறகும் போட்டோ எடுப்பதை நிறுத்தாத கான்ஸ்டபிளைக் கண்டு இன்னும் கோபமான சையது ஷஃபி, படாரென அவரின் கையிலிருந்த போனைப் பிடுங்க முயன்றிருக்கிறார். இதில் நடந்த மோதலில் சையது, அந்த கான்ஸ்டபிளின் கையைக் கடித்திருக்கிறார். இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது சையது ஷஃபி என்கிற அந்த நபர் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.