சென்னை: வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது திரைப்பயணம் மிகச்சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து நல்ல கதைக்களங்களில் முன்னணி இயக்குனர்களுடன் இணையும் வாய்ப்பினை இவர் பெற்றார். விஷ்ணு விஷாலின் அடுத்தடுத்த வெற்றி படங்கள் ரசிகர்களை கொண்டாட வைத்தது. தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான பட வாய்ப்புகளையும் பெற வைத்தது.
