வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நம் நாட்டின் கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேருக்கு, மேற்காசிய நாடான கத்தார் அரசு மரண தண்டனை விதித்தது. இஸ்ரேல் அரசுக்கு இவர்கள் உளவு வேலை பார்த்ததாக கத்தார் அரசு குற்றஞ்சாட்டி தண்டனை வழங்கி இருந்தது. இவர்களுடைய குடும்பங்கள் மத்திய அரசிடம் முறையிட்டன.
அரபு நாட்டில் ஒருவருக்கு மரண தண்டனை என்றால், அவர் கதை முடிந்தது என்று அர்த்தம். ஆனால், கடந்த வாரம் இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு, இந்தியாவிற்கு திரும்பினர்.
இது எப்படி சாத்தியம்; இது குறித்து, மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் எந்த விபரங்களையும் தெரிவிக்கவில்லை. கடந்த ஆறு மாதங்களாக இவர்களை விடுவிக்க அரசு தரப்பில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பிரதமர் மோடி தலைமையில் ஒரு பெரிய குழுவே இதற்காக வேலை செய்துள்ளதாம்.கத்தார் அரசிடம் பிரதமர் பேசியதாக கூறப்படுகிறது. இதைத் தவிர, ‘இந்த முன்னாள் அதிகாரிகள் தவறு செய்யவில்லை’ என்பதற்கான ஆவணங்களையும், கத்தார் அரசிடம் மத்திய அரசு சமர்ப்பித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரின் தீவிர முயற்சிகளால், இவர்கள் விடுவிக்கப்பட்டனராம். இதையடுத்து, இந்த அதிகாரிகளின் மனைவியர், பிரதமர் மோடிக்கு கண் கலங்கி இ – மெயில் வாயிலாக நன்றி தெரிவித்து உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement