கோடைக்காலம் வந்துட்டா போதும் இந்த வார்த்தைய கண்டிப்பா நம்ம வீடுகள்ல தவிர்க்க முடியாது “என்னா வெயிலு… எப்போம்மா நம்ம வீட்டுக்கு ஏசி வாங்குவோம்?”. இந்தக் கேள்விய தவிர்த்திட்டு நம்ம கோடைக்காலமே நகர்றது இல்லைல! இந்தக் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்தாச்சு… விஷயம் என்னானு கடைசில சொல்றேன். வீட்டுக்கு ஏசி வாங்க போறோம்னு முடிவு பண்ணிட்டோம்ன்னா, ஏசி பத்தி கண்டிப்பா என்ன? எப்படி? எங்க? எவ்வளவுல? மெயிண்டனஸ்? அப்படி இப்படினு பல கேள்விகள் நிற்காம தலையில ஓடுதுல? கவலை வேண்டாம்! உங்க டவுட்ட நான் க்ளியர் பண்றேன்.
என்ன ஏசி வாங்கலாம்?
பொதுவா ஏசி மூன்று வகைகள்ல கிடைக்கும். அவை, விண்டோ(Window) ஏசி, ஸ்பிளிட்(Split) ஏசி, போர்ட்டபிள்(Portable) ஏசி. இந்த மூன்றுல விண்டோ ஏசி வாங்கி மெயிண்டென் பண்றது ரொம்ப ஈசி. இதோட மொத்த பாகமும் ஒரே பாக்ஸ்ல இருக்கும், அறையோட சுவர்ல ரொம்ப சுலபமா ஃபிக்ஸ் பண்ணிட முடியும். விலையும் குறைவு தான். ஆனா இதுல இருக்குற ஒரே சிக்கல் சத்தம் தான். சின்ன சத்தம் கேட்டாலும் தூக்கம் வராதுனு நினைவுக்குறவங்க விண்டோ ஏசிய கொஞ்சம் யோசிச்சி தான் வாங்கனும். அடுத்து, ஸ்பிள்ட் ஏசி. உலகளவுல நிறைய வீடுங்கள்ல பயன்படுத்துற ஏசி ஸ்பிள்ட் ஏசி தான். இது இன்-டோர் யூனிட் அவுட்-டோர் யூனிட்னு ரெண்டு பார்ட் வரும். இதுல சத்தம் பெருசா இருக்காது. அறைய ரொம்ப சீக்கிரமே குளிரூட்டிடும். போர்ட்டபிள் ஏசி, இத உங்க வீட்ல எங்க வேணாலும் வச்சி பயன்படுத்திக்கலாம்.
என்ன அளவுல ஏசி வாங்கலாம்?
அறையோட அளவ பொறுத்தும், வீட்டோட வெளிப்புற வெட்பநிலைய பொறுத்தும் தான் ஏசியோட அளவை முடிவு பண்ணனும். 120-140 sq-ft அறைக்கு 1 டன் ஏசி போதுமானது. 150-180 sq-ft அளவுள்ள அறைக்கு 1.5 டன் மற்றும் 180-240 sq-ft அளவுள்ள அறைக்கு 2 டன் ஏசியும் பொருத்தமாக இருக்கும். இதில், அறையில் இருக்கும் நபர்களைப் பொறுத்தும், பொருட்களைப் பொருத்தும் ஏசியை தேர்ந்தெடுக்கும் முறை மாறும். அதனால், விவரங்களை நீங்கள் ஏசி வாங்க போகும் இடத்தில் கண்டிப்பாக கூறி அவர்கள் ஆலோசனையைப் பெற்று அவர்கள் பரிந்துரைக்கும் ஏசியின் அளவில் வாங்குங்கள்.

ஏசி’யில் பழுது வராமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க!
பார்த்துப் பார்த்து ஒரு பொருளை வாங்கும் முனைப்பை, அதை பராமரிப்பதில் சிலர் தவறிவிடுகிறார்கள். ஏசியை பராமரிக்க சிம்பிள்லான சிக்ஸ் டிப்ஸ்:-
-
வீட்டில் ஏற்படும் மின்னழுத்த மாறுபாடுகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும். தொடர் வோல்ட்டேஜ் மாறுபாடுகள் ஏற்படும் போது ஏசியை ஆஃப் செய்து மின்னழுத்த மாறுப்பாட்டை சரிசெய்ய வேண்டும்.
-
வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதம் இரு முறை ஏசியின் ஏர் ஃபில்டரை கழட்டி சுத்தம் செய்ய வேண்டும்.
-
எக்காரணம் கொண்டும் ஏர் ஃபில்டரைத் தவிர ஏசியின் எந்தப் பாகத்தையும் கழற்வோ அல்லது நீங்களாவே ஏசியை பழுதுப் பார்க்கவோ முயற்சி செய்யக்கூடாது.
-
ஏசி’யின் வெட்பநிலையை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்காமல் ஒரே வெட்பநிலையை சீராக வைத்து பயன்படுத்தினால் ஏசியின் வாழ்நாள் நீடிக்கும்.
-
ஸ்பிள் ஏசியின் அவுட் டோர் யூனிட்டில் பூச்சிகள் அண்டாதப் படியும், பறவைகள் கூடுக்கட்டாதப் படியும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
-
ஏசியில் இருந்து தண்ணீர் வெளியேறும் பைப்பில் அடைப்பு ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ளவேண்டும்.

முன்னாடியே ஏசி வாங்க நேரம் வந்தாச்சுனு ஒரு விஷயம் சொல்றேனு சொன்னேன் இல்லையா! அது என்னானு இந்நேரம் நீங்களே கெஸ் பண்ணிருப்பிங்க… ஆமாங்க, ஏசி’னாலே குளுகுளு ஃபீல் தான். அப்போ ஏசி வாங்கனும்ன்னா குளுகுளுவோட ஆஃபரும் சேர்ந்தா தானே செம்ம ஜோரா தானே இருக்கும்.
நம்ம சத்யா’ல வர போற சம்மருக்கு இப்போவே குளுகுளு ஏசி ஆஃபர் ஆரம்பம் ஆகிடுச்சு. LG, VOLTAS போன்ற உலகத்தர முன்னணி ஏசி ப்ராண்ட்ஸ் மிகக்குறைந்த EMI ஆப்ஷன்ல ரூ.1999லந்தே இங்க கிடைக்குது. இதோட ரூ.6000 மதிப்புள்ள நாற்காலியும் இலவசமா கிடைக்குது. மேலும், Single/Double பூஸ்டர் ஸ்டேபிளைசர்க்கு 20% தள்ளுபடி இருக்கு. இந்த சம்மர்ர சத்யாவோட குளுகுளு ஏசியோட என்ஜாய் பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு 88805 98985.