சென்னை இன்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2 வாரங்களாகச் சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அவ்வகையில் இன்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே பயணிகளின் வசதிக்காக இன்று மெட்ரோ ரயில் சேவை கூடுதலாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், “தெற்கு ரயில்வேயில் சென்ட்ரல் மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று மெட்ரோ […]