
பாப் கட்டிங் ஸ்டைலுக்கு மாறிய ஜோதிகா
நடிகை ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்கிஸில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார். மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து காதல் தி கோர் என்ற படத்தில் நடித்தவர், அதையடுத்து தற்போது தனது தாய்மொழியான ஹிந்தி சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அங்கு அஜய் தேவ்கன், மாதவனுடன் இணைந்து சைத்தான் என்ற படத்தில் நடித்திருக்கிறார் ஜோதிகா. அடுத்தடுத்து புதிய படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது பாப் கட்டிங் லுக்கிற்கு மாறியிருக்கிறார் ஜோதிகா. அந்த ஸ்டைலில் கோட் சூட் அணிந்து செம கெத்தான எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். ஜோதிகாவின் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.