மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி: 'ரகசியமாக தொடங்கியது ஏன்?' – சு.வெங்கடேசன் கேள்வி

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரையில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டினார்.

எய்ம்ஸ் கட்டுமானப்பணி

ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் தொடங்காமல் இருந்து வந்தது. எய்ம்ஸ்க்கு ஜப்பான் நிதி நிறுவனத்திலிருந்து கடன் வழங்க தாமதமாவதால் கட்டுமானப்பணி தொடங்கவில்லை என்ற சொல்லப்பட்டது. இதற்கிடையே எய்ம்ஸ் நிர்வாகக்குழு அமைக்கப்பட்டு தற்காலிகமாக எம்.பி.பி.எஸ் வகுப்புகள் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் நடந்து வருகிறது.

10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு 12 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுமா என்று தமிழக அரசியல் மேடைகளில் முக்கிய விஷயமாக பேசப்பட்டு வந்தது.

மதுரை எய்ம்ஸ்

இந்நிலையில்தான் 870 படுக்கை வசதியுடன் மருத்துவமனை, 38 படுக்கைகளுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சை மையம், மாணவர்கள்., செவிலியர்களுக்கென வகுப்பாறை கட்டடம்., ஆய்வகக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் கட்டுவதற்காக டெண்டர் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான வேலைகள் தொடங்கியது. தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் மருத்துவமனை அமைய உள்ள இடத்தினை சமன் செய்யும் பணிகளை பூஜையுடன் தொடங்கினார்கள். கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 33 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

கட்டுமானப் பணிக்கான பூஜை

தென்மாவட்ட மக்கள் எதிர்பார்த்த மகிழ்ச்சியான நிகழ்வை மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கோ, மாவட்டத்திலுள்ள அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் யாருக்கும் தெரியப்படுத்தாமல் தொடங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சு.வெங்கடேசன்

இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன், “ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப்பணி இன்று துவக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரதமர் மதுரைக்கு வந்தார். அப்பொழுது அவரை வைத்து துவக்கி இருக்கலாம். அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திட்டத்தின் துவக்க நிகழ்வுக்கும் இடையே 5 ஆண்டு என்ற புதிய சாதனையை தேசம் அறிந்திருக்கும்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.