பெற்ற மகனின் வாழ்க்கையை பாதித்த சீரியல் நடிப்பு – கவுதமி வேம்புநாதன் குமுறல்

சீரியல்களில் வில்லியாக பல வருடங்களாக கலக்கி வருகிறார் கவுதமி வேம்புநாதன். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சீரியலில் வில்லியாக நடிப்பதால் நிஜ வாழ்வில் தன் மகனின் திருமண வாழ்க்கைக்கே பிரச்னை வந்ததாக கூறியுள்ளார். கிட்டதட்ட 18 வருடங்களாக பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள கவுதமி வேம்புநாதன் வில்லி மற்றும் காமெடி ரோல்களில் நடித்து வருகிறார். கவுதமி வில்லியாக நடிப்பதை பார்த்து பலர் இவருடன் பேசவே பயப்படுவார்களாம்.

அதிலும் அவருடைய சொந்த மகனே 'அம்மா நீ இப்படி நடிப்பதால் எனக்கு திருமணம் ஆகாதோன்னு தோனுது' என்று சொல்லியிருக்கிறார். அதுபோலவே ஒரு பெண் வீட்டில் கவுதமியின் குடும்ப புகைப்படத்தை பார்த்து ‛இந்தம்மா பெரிய வில்லியாச்சே' என பயந்து இருக்கிறார்களாம். இந்த சம்பவத்தை நேர்காணலில் மிகவும் ஜாலியாக பகிர்ந்து கொண்ட கவுதமி வேம்புநாதன் நிஜ வாழ்வில் உண்மையாகவே பழகுவதற்கு மிகவும் இனிமையானவராம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.