சென்னை: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் தான் ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது விழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. சினிமா உலகின் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஆனால், இது பெரும்பாலும் அமெரிக்க படங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அயல்மொழித் திரைப்படங்கள் பிரிவில் மற்ற நாடுகளில் இருந்து அனுப்பப்படும் படங்களில் ஒரே ஒரு படத்தை தேர்வு