IPL 2024: பஞ்சாப் கிங்ஸ் மோதும் போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட்டுகள் வெளியானது!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2024) மார்ச் 22 வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) இடையே நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்த மோதல் அரங்கேற இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணயின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட இருப்பதை ரசிகர்கள் காண ஆர்வமாக இருக்கின்றனர். இந்த சூழலில் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் முதல் போட்டி

பஞ்சாப் கிங்ஸ் (PBKS) தங்கள் ஐபிஎல் 2024 பயணத்தை டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான மார்ச் 23-இல் தொடங்குகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி சண்டிகர், முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கிறது. ஷிகர் தவான் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் போட்டியை சொந்த மைதானத்தில் விளையாட இருக்கிறது. 

PBKS போட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு

இப்போட்டியை பார்த்து ரசிக்கும் வகையில் ரசிகர்களுக்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. PBKS முதல் முதல் போட்டிக்கான டிக்கெட்டுகள் இப்போது Paytm இன்சைடரில் கிடைக்கின்றன. டிக்கெட் விலை INR 1200 முதல் INR 2750 வரை இருக்கும். ரசிகர்கள் தங்களுடைய டிக்கெட்டுகளை டெலிவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

PBKS IPL 2024 டிக்கெட் விலைகள்:

* கென்ட் வெஸ்ட் டெரஸ் ஏ: இந்திய ரூபாய் 1200
* ஜியோ ஈஸ்ட் டெரஸ் ஏ: 1500 ரூபாய்
* அனைத்து சீசன்களும் வடக்கு பெவிலியன் A: INR 2750

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் PBKS டிக்கெட்டுகளை எவ்வாறு பதிவு செய்வது?

– Paytm இன்சைடரின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று சண்டிகர் தேர்ந்தெடுக்கவும்.
– பஞ்சாப் கிங்ஸின் ஐபிஎல் 2024 பிரிவுக்குச் சென்று, “BUY NOW” என்பதைக் கிளிக் செய்யவும்.
– போட்டிக்கான உங்கள் விருப்பமான இருக்கைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை உங்கள் Cart-ல் சேர்க்கவும்.
– பாக்ஸ் ஆபிஸில் இருந்து டிக்கெட் எடுப்பது அல்லது போஸ்டல் டெலிவரி என இரு ஆப்சன்களில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யவும்.
– டெலிவரிக்கு, உங்கள் டிக்கெட் டெலிவரி முகவரி மற்றும் தொடர்பு விவரங்களை உள்ளிட்டு, “Continue” என்பதைக் கிளிக் செய்யவும். 
– பாக்ஸ் ஆபிஸ் பிக்கப்பிற்கு, “Free Pickup” என்பதைத் தேர்ந்தெடுத்து, “Continue” என்பதைக் கிளிக் செய்யவும்.
– உங்கள் தொடர்பு விவரங்களை உள்ளிட்டு, உங்களுக்கு விருப்பமான முறையில் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும். டெலிவரி மற்றும் பிக்அப் விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் மூலம் தெரிவிக்கப்படும்.
– டிக்கெட்டுகள் ஆஃப்லைனில் எப்படி வாங்குவது என்பதற்கான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.