
கிழக்கு வாசல் தொடரில் என்ட்ரி கொடுத்த பிரகர்ஷிதா
பிரபல குழந்தை நட்சத்திரமான பிரகர்ஷிதா 18 ஆண்டுகளுக்கு பிறகு சின்னத்திரைக்கு கம்பேக் கொடுத்துள்ளார். பொதிகை டிவியில் ஒளிபரப்பாகும் ராதிகாவின் 'தாயம்மா' என்ற தொடரில் பிரகர்ஷிதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ராதிகாவின் ராடன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'கிழக்கு வாசல்' தொடரிலும் தற்போது அவர் என்ட்ரி கொடுத்துள்ளார். கிழக்கு வாசல் தொடரில் பிரகர்ஷிதாவின் என்ட்ரி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.