WPL 2024: பைனலில் ஆர்சிபி… வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ் – மிரட்டிய மந்தனா & கோ

WPL 2024, RCB vs MI Eliminator Highlights In Tamil: மகளிர் ஐபிஎல் என்றழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் (WPL 2024) இரண்டாவது சீசன் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி தொடங்கியது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெய்ன்ட்ஸ், UP வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் விளையாடின. ஒவ்வொரு அணியும் மீதம் உள்ள நான்கு அணிகள் தலா 2 போட்டிகள் என லீக் சுற்றில் தலா 8 போட்டிகளை விளையாடின. 

இதில் புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. UP வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகியோர் லீக் சுற்றோடு வெளியேறினர். இதில் முதலிடம் பிடித்த டெல்லி அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறிய நிலையில், எலிமினேட்டரில் மும்பை – பெங்களூரு அணி இன்று மோதின. 

கைக்கொடுத்த எல்லீஸ் பெர்ரீ

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சீசனை போலவே இறுதிப்போட்டிக்கு சென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் காரணம், டாஸ் வென்று பேட்டிங்கை எடுத்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக எல்லீஸ் பெர்ரீ 66 ரன்களை எடுத்தார். ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், சைகா இஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

@RCBTweets secure a 5-run win over #MI in an edge of the seat thriller in Delhi

They will now play @DelhiCapitals on 17th March!

Scorecardhttps://t.co/QzNEzVGRhA#MIvRCB | #Eliminator pic.twitter.com/0t2hZeGXNj

— Women’s Premier League (WPL) (@wplt20) March 15, 2024

ஆர்சிபியின் அசத்தல் பந்துவீச்சு

வெறும் 136 ரன்களை எடுத்தால் போதும் என்ற நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கடப்பாரை பேட்டிங் லைன்அப் இருந்தது. ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சை அவர்களை எளிதாக ரன் எடுக்கவிடவே இல்லை. ஸ்டம்ப் லைனிலேயே தொடர்ந்து பந்துவீசி மும்பை அணி ரன்களை எடுக்க தடுமாற வைத்தனர். இருப்பினும், யஸ்திகா பாட்டியா, ஹேலி மேத்யூஸ் சுமாரான தொடக்கத்தை அளித்தாலும் நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், கேப்டன் ஹர்மன் பிரீத் கௌர் ஆகியோர் மும்பையை கொஞ்சம் நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றனர். பிரண்ட் 11ஆவது ஓவரில் ஆட்டமிழந்த பின் ஹர்மன் பிரீத் கௌருக்கு எமிலியா கெர் துணையாக இருந்தார். 

கடைசி ஓவர்களில் திக் திக் திக்….

இருப்பினும், 18ஆவது ஓவரில் ஷ்ரேயங்கா பாட்டீலின் ஓவரின் கடைசி பந்தில் ஹர்மன் பிரீத் அவுட்டாக ஆட்டமே திரும்பியது. 19ஆவது ஓவரில் சோஃபி மோலினக்ஸ் அசத்தலாக பந்துவீசி சஞ்சனாவின் விக்கெட்டை எடுத்தார். குறிப்பாக, அந்த ஸ்டம்பிங்கிற்கு ரிச்சா கோஷிற்குதான் முழு பாராட்டும் சென்று சேரும். சஞ்சனா பெரிய ஹிட்டர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

அவரை 19ஆவரிலேயே அவுட்டாகியதால் ஆர்சிபி அணிக்கு கைக்கொடுத்தது. மும்பை அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆர்சிபி பந்துவீச்சாளர் சோபனா ஆஷா அற்புதமாக வீசி வெறும் 6 ரன்களை மட்டுமே கொடுக்க, ஆர்சிபி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றது. ஆரஞ்சு கப்பை பெற்ற எல்லீஸ் பெர்ரீ , பிளேயர் ஆப் தி மேட்ச் விருதையும் வென்றார். வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லி – பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.