பெங்களூரு : பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்து, தமிழகத்தின் கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம், திருநெல்வேலி, துாத்துக்குடி, திருச்செந்துார், ஊட்டி, கோயம்புத்துார், தேனி, மதுரை உட்பட, பல ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் பயணியரின் நீண்டநாள் கோரிக்கைக்கு ஏற்ப, சாந்திநகரில் இருந்து தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு, தமிழக அரசு பஸ் சேவை துவங்கி உள்ளது.
பெங்களூரில் இருந்து தினமும் இரவு 10:00 மணிக்கு புறப்படும் பஸ், மறுநாள் காலை 6:00 மணிக்கு கல்பாக்கம் சென்றடைகிறது.
கல்பாக்கத்தில் இருந்து தினமும் இரவு 8:30 மணிக்கு புறப்படும் பஸ், மறுநாள் காலை 5:30 மணிக்கு, பெங்களூரு வந்தடைகிறது. ஓசூர், கிருஷ்ணகிரி, வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக இந்த பஸ் இயக்கப்படுகிறது.
இருக்கையில் அமர்ந்து பயணிக்க, 450 ரூபாய் கட்டணமும், படுக்கை வசதி கொண்ட இருக்கைக்கு 600 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement