ஈஷா யோகா மைய நிறுவனரும் ஆன்மீகவாதியுமான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதை அடுத்து அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மார்ச் 17ம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் ஜக்கி வாசுதேவ் உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருவதாகக் கூறப்படுகிறது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு சத்குரு, வென்டிலேட்டர் உதவியின்றி “நிலையான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளார், மேலும் அவரது மூளை, உடல் மற்றும் முக்கிய அளவுருக்கள் மேம்பட்டுள்ளன” என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. 66 வயதான […]
