புதுடெல்லி,
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்த நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்துகொள்கின்றன.
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடரில் இதுவரை அதிகபட்சமாக மும்பை மற்றும் சென்னை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.
பல நாடுகளை சேர்ந்த நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் கலந்து கொள்வதால் இந்த தொடர் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரிது எதிர்பார்க்கப்படும் ஒன்றாக அமைந்துள்ளது. இதனால் இந்த தொடரில் கலந்துகொண்டுள்ள அணிகளின் சமூக வலைதள பக்கங்களை ஏராளமான ரசிகர்கள் பின்தொடருகின்றனர்.
அந்த வகையில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அதிக பாலோவர்களை கொண்ட அணியாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்கிறது. 2-வது இடத்தில் கோலி, மேக்ஸ்வெல் அடங்கிய பெங்களூரு உள்ளது. முன்னதாக 2-வது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி நீக்கத்தின் காரணமாக 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோவர்களை இழந்து 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது.
அந்த பட்டியல்:-
1.சென்னை சூப்பர் கிங்ஸ் – 14.2 மில்லியன் பாலோவர்கள்
2. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 13.1 மில்லியன் பாலோவர்கள்
3. மும்பை இந்தியன்ஸ் – 12.7 மில்லியன் பாலோவர்கள்
4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 4.6 மில்லியன் பாலோவர்கள்
5. டெல்லி கேப்பிடல்ஸ்- 3.7 மில்லியன் பாலோவர்கள்
6. குஜராத் டைட்டன்ஸ்- 3.6 மில்லியன் பாலோவர்கள்
7. ராஜஸ்தான் ராயல்ஸ் – 3.6 மில்லியன் பாலோவர்கள்
8.சன்ரைசர்ஸ் ஐதராபாத் – 3.4 மில்லியன் பாலோவர்கள்
9. பஞ்சாப் கிங்ஸ் – 3.1 மில்லியன் பாலோவர்கள்
10. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – 3 மில்லியன் பாலோவர்கள்