Ather Rizta teased – புதிய ஏத்தர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு | Automobile Tamilan

ஏப்ரல் 6 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள ஏத்தர் நிறுவனத்தின் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பாக வெளியிட்ட புதிய டீசர் மூலம் நீரில் பயணிக்கும் திறன் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ளது.

முன்பாக 40 அடி உயரத்திலிருந்து பேட்டரி தூக்கி எறியப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட டீசர் வெளியான நிலையில், தற்பொழுது 400 மிமீ நீர் நிரம்பிய இடத்தில் ஸ்கூட்டரை இயக்கி சோதனை ஓட்டத்தை ஈடுத்திய வீடியோ வெளியிட்டுள்ளது.

மிக அகலமான இருக்கை குடும்ப பயன்பாடுகளுக்கு ஏற்றதாக விளங்கும் வகையில் ரிஸ்டாவில் IP67 பேட்டரி ஆதரவினை பெற்றதாக அமைந்துள்ளது.  2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெறக்கூடும். இந்த பேட்டரிகள் ஏற்கனவே விற்பனையில் உள்ள 450 சீரிஸ் ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கின்றன.

3.7Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 150-160 கிமீ தொலைவு பயணிக்கலாம் அடுத்து குறைந்த விலை 2.9Kwh பேட்டரி கொண்ட மாடல் 111-125 கிமீ ரேஞ்சு வழங்கலாம்.

இந்த மாடலின் மற்றொரு முக்கிய விபரமாக 7 அங்குல தொடுதிரை டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றதாக அமைந்துள்ளது. இந்த கிளஸ்ட்டர் முன்பாக 450X ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கின்றது.

இந்நிறுவனத்தின் ACDC 24 (Ather Community Day Celebration 2024) கூட்டம் அனேகமாக ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து டெலிவரி மே அல்லது ஜூன் மாதம் துவங்கலாம்.

தொடர்ந்து படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.