சென்னை: நடிகை திரிஷா 20 ஆண்டுகளை கடந்து தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. தற்போது தமிழில் அஜித், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டவர்களுடன் இணைந்து விடாமுயற்சி, தக் லைஃப், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
