சென்னை இன்று ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுக் கொண்ட அமைச்சர் பொன்முடிக்கு அளிக்கப்பட்டுள்ள துறைகளின் விவரங்கள் வருமாறு சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடிக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. பொன்முடி இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவருடைய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் நிறுத்தி வைக்கப்பட்டது. தீர்ப்பினால் பொன்முடியின் தகுதி நீக்கம் ரத்தாகி மீண்டும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அவருக்கு மீண்டும் அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரைத்தார். […]
