
இளையராஜா படத்தில் இணையும் திரைப்பிரபலங்கள்
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. ‛இளையராஜா' என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் அவரது வேடத்தில் தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் இளையராஜாவின் நீண்டகால நண்பர்களான ரஜினி, கமல் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு இளையராஜாவிடத்தில் கீபோர்ட் பிளேயராக பணியாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவர் இசையமைத்த பல படங்களுக்கு பாடல் எழுதிய அவரது தம்பி கங்கை அமரன் ஆகியோரும் இந்த படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும், ரஜினி – கமல் ஆகியோர் இப்படத்தில் நடிக்கும் தகவல் உறுதி செய்யப்பட்டால், 42 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் இணைவது உறுதியாகி விடும். கடைசியாக 1981ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய தில்லு முல்லு என்ற படத்தில் ரஜினியும், கமலும் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.