கலாபவன் மணியின் சகோதரர் நிறம் குறித்து விமர்சித்த கலாமண்டலம் சத்தியபாமாவுக்கு குவியும் கண்டனங்கள்

நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மலையாளம் மட்டுமல்லது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் மறைந்த நடிகர் கலாபவன் மணி. அவர் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் என்பவர் சினிமாவில் நடிகராக நுழைந்து சில படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்ல கலா மண்டலம் என்கிற நாட்டிய பள்ளியில் முறைப்படி மோகனி ஆட்டம் கற்றுக் கொண்ட அவர் பலர் நிகழ்ச்சிகளில் அதை அரங்கேற்றி வருகிறார்.

இந்த நிலையில் கலா மண்டலம் பயிற்சி பள்ளியை சேர்ந்த சத்தியபாமா என்பவர் ராமகிருஷ்ணன் மோகினி ஆட்டம் ஆடுவது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “காக்காய் நிறத்தில் இருக்கும் ஒருவர் தான் மோகினி ஆட்டம் ஆட வேண்டுமா ?” என்று நிறத்தை குறிப்பிட்டு பேசி சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு மலையாளத் திரை உலகில் இருந்தும் ரசிகர்களிடமிருந்தும் தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

கலாபவன் மணியின் படங்களை அதிகம் இயக்கிய இயக்குனர் வினயன் இது குறித்து கூறும்போது, “நிறத்தை வைத்து சத்தியபாமா இவ்வாறு பேசியது தவறு. அவர் உண்மையிலேயே ஒரு ஆர்டிஸ்ட் என்றால் தான் பேசியதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற நிலை தாக்குதல்களை மறைந்த நடிகர் கலாபவன் மணி தானும் சந்தித்திருப்பதாக என்னிடம் பலமுறை கூறி வருத்தப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்,

அதேபோல நடிகர் ஹரீஷ் பெராடி இந்த சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கூறும்போது, “சத்தியபாபா சொன்னதற்கு எதிராக தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக ராமகிருஷ்ணன் இனி அவரது அடுத்த நிகழ்வுகளில் மேக்கப் போட்டுக் கொள்ளாமல் தன்னுடைய எதிர்ப்பை காட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார். இன்னும் பல பிரபலங்களும் தங்களது அதிர்ச்சியையும் கண்டனங்களையும் சத்தியபாமாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.