டில்லி காங்கிரஸில் இருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த பெருமையைக் கொண்டவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சி. ராஜகோபாலச்சாரி. ராஜாஜி எனக் கட்சியினரால் அழைக்கப்பட்ட இவருடைய கொள் பேரன் சி.ஆர். கேசவன் ஆவார். கேசவன் கடந்த 2001-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி மையத்தின் துணை தலைவர் (ஒரு மாநில அமைச்சருக்கு இணையானது) என்ற பதவியை வகித்த […]
