
சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்!
சின்னத்திரை நடிகை அக்ஷிதா நந்தினி, கண்ணான கண்ணே, தமிழும் சரஸ்வதியும் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். அடிப்படையில் மாடலான அக்ஷிதா இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் அக்ஷிதாவிற்கு தற்போது ப்ரீதம் சுரேஷ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாவில் வைரலாகும் நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.