
மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக்
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் இளையராஜா என்ற படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க, இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தில் ரஜினி- கமல் ஆகியோரும் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது ஏ.ஆர்.ரகுமான் வேடத்தில் சிம்புவும், மணிரத்னம் வேடத்தில் மாதவனும், பாடலாசிரியர் வைரமுத்து வேடத்தில் விஷாலும் நடிக்க இருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இளையராஜா பயோபிக் படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகிறது. இவர்கள் தவிர தானும் இந்தப்படத்தில் ஒரு அங்கமாக இருப்பேன் என இயக்குனர் பாரதிராஜாவும் தெரிவித்துள்ளார்.