சென்னை கொடுங்கையூர் பகுதியில் அதிமுக சார்பில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர். ஆர். மனோகரன் பிரசாரம் செய்தார்.பாஜக வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ் தண்டையார்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்தார்கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை, மருதமலை மற்றும் வடவள்ளி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.பிஜேபி கூட்டணி பாமக வேட்பாளரான திலகபாமா வடை சுட்டு திண்டுக்கல் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.தேனி வேட்பாளரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம்ஈரோடு – தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் டீக்கடையில் அவரே டீ போட்டுக் கொடுத்து வாக்குகளை சேகரித்தார்சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி ராதாகிருஷ்ணன் இன்று வீடு வீடாக பூத் ஸ்லிப் கொடுக்கும் பணியை வேப்பேரியில் தூக்கி வைத்து ஆய்வு செய்தார்.பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் ஓட்டு போடுவதற்கு தேவையான அழியாத மை உட்பட 20க்கும் மேற்பட்ட பொருள்களை சரி பார்த்து அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ராமநாதபுரத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ராமேஸ்வரம் கோவிலில் புனித நீராடினார்.வேலூர் தந்தை பெரியார் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் வாக்கு பெட்டிகள் வைக்கும் அறையில் வரிசை எண் எழுதப்பட்டு சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறதுவேலூரில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வாக்குசேகரிப்பு.