புதுடில்லி நா த க யூடியூபர் சாட்டை துரைமுருகன் ஜாமீன் வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பி உள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடிகை குஷ்பு குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகன் தஞ்சை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவருக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இனி யார் குறித்தும் அவதூறாகப் பேசக்கூடாது என நிபந்தனை விதித்தது. […]
