லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அசுதோஷ் யாதவ், திருமணமானவர். குடும்ப தகராறு காரணமாக, இவரது மனைவி வீட்டார் இவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு லக்னோவில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது அசுதோஷ் யாதவுக்கு எதிராக கடந்த மார்ச் 6-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அசுதோஷ் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி அமர்வு முன்பு நடைபெற்றது. வழக்கு விசாரணையின் போது, ‘‘இந்து திருமண சட்டத்தின்படி, திருமணத்தின் போது மகளை அவரது தந்தை கைப்பிடித்து மணமகனிடம் ஒப்படைக்கும் சடங்கு கட்டாயம் செய்ய வேண்டும். ஆனால், என் விஷயத்தில் அப்படி கன்னியாதான சடங்கு நடைபெறவில்லை’’ என்று வாதிட்டார்.