நாகப்பட்டினம் பாஜக வேட்பாளரை வரவேற்கப் பட்டாசு வெடித்ததில் நாகையில் 2 குடிசை வீடுகள் தீக்கிரையாகி உள்ளன. பாஜகவைச் சேர்ந்த எஸ் ஜி எம் ரமேஷ் என்பவர் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். நாகை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர், புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்குத் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றபோது பா.ஜ.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ரமேஷை வரவேற்பதற்காகப் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பட்டாசுகள் வெடித்துச் சிதறிய […]
