போபால்,
மத்தியபிரதேச மாநிலம் ரீவா மாவட்டம் மனிகா கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் மயங்க். சிறுவன் நேற்று மாலை 9 மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள வயல்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது, வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் தவறிவிழுந்தான். 70 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ளான்.
சிறுவன் ஆழ்துளை கிணற்றிக்குள் விழுந்தது குறித்து தகவலறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :