சிஎஸ்கே பிளேயிங் வரப்போகும் 'இந்த' மாற்றங்கள்… மும்பையை வீழ்த்த 'இதுதான்' வியூகம்!

MI vs CSK Playing XI Changes: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்ட்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து சந்திக்கிறது. 

அந்த போட்டியை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இந்த சீசனில் புதிய கேப்டன்கள் பொறுப்பேற்றுள்ளனர். 

பலமான மும்பை அணி

இரு அணிகளும் இந்த போட்டியை வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. வான்கடே மைதானம் மும்பை அணிக்கு சாதகமாக இருந்தாலும், பல மும்பை மற்றும் மகாராஷ்டிர வீரர்களை அணியில் வைத்திருக்கும் சிஎஸ்கே அணியும் தைரியமாக நாளை சண்டையிடும் எனலாம்.

மும்பை அணி முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தாலும், கடைசி இரண்டு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் சரியான காம்பினேஷனை அந்த அணி தேர்வு செய்துவிட்டதனால்தான் எனலாம். குறிப்பாக, சூர்யகுமார் யாதவின் வருகை அந்த அணியின் பேட்டிங் ஆர்டருக்கு மிகப்பெரிய பலத்தை அளித்துள்ளது எனலாம். 

எனவே, சிஎஸ்கே அணிக்கு எதிரான நாளைய போட்டியிலும் மும்பை அணி எவ்வித மாற்றத்தையும் செய்யாது எனலாம். மும்பை அணியில் 8-9 பேட்டர்கள், 6-7 பந்துவீச்சாளர்கள் இருப்பது அந்த அணியை மற்ற அணிகளை விட தனித்து தெரியும்படி வைத்துள்ளது. 

சென்னை அணியில் நீடிக்கும் கேள்விகள்…

மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கத்திற்கு வெளியே மற்ற இடங்களில் தோல்வியே தழுவியுள்ளது. ஒரு சில போட்டிகளில் பதிரானா மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோரை சிஎஸ்கே இழந்த நிலையில், கடந்த போட்டியில் தீபக் சஹாரை காயம் காரணமாக அமரவைத்தது. அந்த வகையில், மும்பை அணிக்கு எதிரான நாளைய போட்டியில் யார் யார் விளையாடுவார்கள் என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. 

கடந்த இரு போட்டிகளிலும் காயம் காரணமாக விளையாடாத பதிரானா நாளைய முக்கிய போட்டியில் நிச்சயம் விளையாடுவார் எனலாம். மேலும், வான்கடேவில் அதுவும் இரவில் சுழற்பந்துவீச்சு எடுபடாது என்பதால் தீக்ஷனா நிச்சயம் அமரவைக்கப்படுவார். அதுமட்டுமின்றி, டேரில் மிட்செல் உலகக் கோப்பையில் வான்கடேவில் இந்திய அணிக்கு எதிரான அரையிறுதியில் சதம் அடித்த நிலையில் அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படலாம். ரச்சின் ரவீந்திரா மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் இதிலும் விளையாடுவார்கள். 

தீபக் சஹார் வருவாரா?

கடந்த போட்டியில் தீபக் சஹார் விளையாடாத நிலையில் அவர் காயத்தில் இருந்து குணமடைந்திருந்தால் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயம் களமிறங்குவார் என தெரிகிறது. வான்கடேவில் நியூ பாலில் நல்ல ஸ்விங் இருக்கும் என்பதால் சஹார், மும்பை அணியின் ஆரம்ப விக்கெட்டுகளை எடுக்க உதவிக்கரமாக இருப்பார். அவர் அணிக்கு வரும்பட்சத்தில் ஷர்துல் வெளியேறுவார் என தெரிகிறது. 

ஓப்பனிங் ஓவர்களை தேஷ்பாண்டே மற்றும் தீபக் சஹார் வீசலாம். இல்லையெனில், ஷர்துல் அணியில் நீடிப்பார், தேஷ்பாண்டே, முஸ்தபிசுர், ஷர்துல் வீசலாம். இதன்மூலம், ராஜஸ்தான் எப்படி மும்பையை வான்கடேவில் தொடக்க விக்கெட்டுகளை எடுத்து பின்வாங்க வைத்ததோ அதேபோல் சென்னை அணியும் முயற்சிக்கலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.