
தயாரிப்பாளராக உருவெடுத்த கேஜிஎப் யஷ்
கன்னட நடிகர் யஷ் கேஜிஎப், கேஜிஎப்- 2 படங்களில் நடித்து பிரபலமான நிலையில், தற்போது நடிகை கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் தானே தயாரிக்கிறார் யஷ். இதையடுத்து பாலிவுட்டில் தயாராகி வரும் ராமாயணம் என்ற படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க, ராவணனாக நடிக்கிறார் யஷ்.
500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் யஷும் இணை தயாரிப்பாளராகி இருக்கிறார். இது குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் போக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். அந்த வகையில் தற்போது தான் நடித்து வரும் இரண்டு படங்களிலும் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார் யஷ்.