இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். கோவை செட்டிப்பாளையம் பகுதியில் நடந்த இந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இண்டியா கூட்டணி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக கடைக்குச் சென்று முதல்வர் ஸ்டாலினுக்காக இனிப்பு வாங்கிய வீடியோவை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சிங்காநல்லூர் பகுதியில், சாலை தடுப்புச் […]
