சென்னை: நடிகர்விஜய் -வெங்கட்பிரபு காம்பினேஷனில் உருவாகிவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் சூட்டிங்கைவெங்கட்பிரபு திட்டமிட்டு வருகிறார். படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
