அமராவதி: மக்களவை தேர்தல்களில் ஆந்திராவில் பாஜக, ஜனசேனா அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கூட்டணி 21 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சி மட்டுமே 16 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணில் இணைந்து மத்திய பாஜக அரசுக்கு உறுதுணையாக நின்றுள்ளது.
இக்கட்சியை சேர்ந்த ஸ்ரீகாகுளம் மக்களவை தொகுதி எம்.பி.கே.ராம்மோகன் நாயுடுவுக்கு (36) மத்திய அமைச்சரவையில் விமான துறை வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த வியாழக்கிழமை மதியம் 1.11 மணிக்கு டெல்லியில் மத்திய விமான துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது ஒரு காகிதத்தில் 21 முறை ஓம் ஸ்ரீ ராம் என எழுதி விட்டு, அதன் பிறகே அவர் அந்த கோப்பில் கையெழுத்திட்டார்.
மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறுகையில், சாதாரண எளிய மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம். இதனை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்றார்.