ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலை (UPSC Prelims) தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதில், சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தேர்வெழுதினர். இந்த நிலையில், யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகி வந்த இளம்பெண் ஒருவர், நேற்று தேர்வு மையத்துக்கு தாமதமாக வந்ததால் அனுமதிக்கப்படாததால், அதிர்ச்சியில் பெண்ணின் தாயார் மயக்கமடைந்ததும், தந்தை புலம்புவதும் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. இந்த வீடியோ குறித்து வெளியான தகவலின்படி, ஹரியானாவில் குருகிராமின் செக்டார் 47-ல் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.
Heartbreaking video.
Condition of Parents who came along with their daughter for the UPSC Prelims exam today, as their daughter was not allowed for being late. Exam starts at 9: 30 am, and they were at the gate at 9 am but were not allowed in by the principal of S.D. Adarsh… pic.twitter.com/2yZuZlSqMZ— Sakshi (@333maheshwariii) June 16, 2024
ஹார்ட் பிரேக்கிங் வீடியோ என்ற பெயரில் இந்த வீடியோவை தனது X சமுக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஒருவர், “தேர்வு, காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது. இளம்பெண் மற்றும் அவரின் பெற்றோர் காலை 9 மணிக்குத் தேர்வு மையத்தின் வாயிலில் இருந்தனர். ஆனால், எஸ்.டி.ஆதர்ஷ் வித்யாலயாவின் (தேர்வு மையம்) முதல்வர் அவர்களை அனுமதிக்கவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் அந்த வீடியோவில், தேர்வெழுதும் இளம்பெண்ணின் தாயார் அதிர்ச்சியில் தரையில் மயக்கமடைந்து கிடக்க, ஒரு வருடம் வீணாகிவிட்டதே என வேதனையில் தந்தை புலம்புகிறார். அப்போது, அவரின் மகள் `அடுத்த வருடம் தேர்வெழுதி தேர்ச்சி பெறுவேன்’ என்று ஆறுதல் கூறுகிறார். இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதில் ஒருவர், `வரும் வழியில் பயணத்தில் எங்கேனும் அவர்கள் சிக்கியிருக்கலாம். அதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு தேர்வு மையத்துக்கு வரமுடியாமல் போயிருக்கும். ஆனால், விதிமுறைகள் அனைவருக்கும் ஒன்றுதான். இருப்பினும், இங்கு கேள்வி என்னவென்றால்… எல்லா இடத்திலும் எல்லோரிடத்திலும் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா?’ என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb