மேஷம் அரசாங்கக் விஷயங்கள் தாமதமானாலும் நல்லபடி முடியும். எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். நல்லவர்களால் ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வாரத்தின் பிற்பகுதியில் சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். அதன் காரணகர்த்தா நீங்களாக இருக்க வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். சிற்சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது ஆலோசனை பெறுங்கள். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. வாரத்தின் பிற்பகுதியில் உறவினர்களாலும் நண்பர்களாலும் […]
