பெங்களூர்: நடிகை ராஷ்மிகா மந்தனா பல மாதங்களுக்குப் பிறகு தனது சொந்த மாநிலமான கர்நாடகாவுக்கு தனது தோழியின் திருமணத்துக்காக சென்றுள்ளார். அங்கே அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. அதற்கு காரணம் வித்தியாசமான முறையில் அவர் அணிந்திருக்கும் சேலைதான். கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.
