மட்டக்களப்பில் இன்று 483 பேருக்கு நிரந்தர நியமனம்!!

உள்ளூராட்சி அதிகார சபைகளில் பதில், ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்களாக கடமை வகித்தவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (17) திகதி மட்டக்களப்பு நகர மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிரந்தர நியமனக் கடிதங்களை 483 பேருக்கு வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகளும், கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களும், உள்ளுராட்சி மன்றங்களின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நியமனங்கள் தமக்கு கிடைப்பதற்கு பிரயர்த்தனம் மேற்கொண்ட மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன், சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு நியமனங்களை பெற்றுக் கொண்டவர்கள் தமது நன்றிகளை தெரிவித்திருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.