நீலகிரி நீலகிரியில் தற்போது கனமழை தொடர்வதால் பொதுமக்கள் பத்திரமாக இருக்க வேண்டும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும் மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாலொ இது மேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் […]
