1998ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது பெற்ற சச்சினுக்கு 2008ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. 2014ம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்றார்.இந்திய கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் டயான எடுல்ஜி 2002ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது பெற்றார்.சென்னையைச் சேர்ந்த ஶ்ரீனிவாசராகவன் வெங்கடராகவன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன், ஐசிசியின் முன்னாள் நடுவர். 2003ம் ஆண்டு இவருக்கு பத்ம ஶ்ரீ விருது வழங்கப்பட்டது.இந்திய பெருஞ்சுவர் எனப் புகழப்படும் ராகுல் ட்ராவிட், 2004ல் பத்ம ஶ்ரீ விருதும், 2013ல் பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார்.சௌரவ் கங்குலி 2004ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது பெற்றார். அனில் கும்ப்ளே 2005ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது பெற்றார்.எம்.எஸ் தோனி 2009ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருதும் 2018ல் பத்ம பூஷன் விருதும் பெற்றார்.ஹர்பஜன் சிங் 2009ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது பெற்றார்.வீரேந்தர் சேவாக் 2010ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது பெற்றார்விவிஎஸ் லக்ஷ்மன் 2011ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது பெற்றார்.ஜூலன் கோஸ்வாமி 2012ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது பெற்றார்.யுவராஜ் சிங் 2014ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது பெற்றார்.மித்தாலி ராஜ் 2015ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது பெற்றார்.விராட் கோலி 2015ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது பெற்றார்.கவுதம் கம்பீர் 2019ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது பெற்றுள்ளார். ஜாகீர் கான் 2020ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது பெற்றார்.கிரிக்கெத் பயிற்சியாளர் குருசரண் சிங் 2023ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது பெற்றார்.2025 ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது பெறுகிறார் ரவிசந்திரன் அஷ்வின்