கொடி கம்பம் வழக்கில் இப்படி ஒரு தீர்ப்பா? அதிர்ந்துபோன அரசியல் கட்சிகள் | Decode

அரசியல் கட்சிகள் பொது இடங்களில் வைத்திருக்கும் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து இந்த வீடியோவில் அலசப்பட்டிருக்கிறது Source link

கோவையில் காதல் திருமணம் செய்த தம்பியை கொன்ற அண்ணனுக்கு தூக்கு தண்டனை

கோவை அருகே மேட்டுப்பாளையத்தில், மாற்றுச் சமூகப்பெண்ணை காதல் திருமணம் செய்த இளைய சகோதரர் மற்றும் அவரது மனைவியை வெட்டிக் கொன்ற வழக்கில், அண்ணணுக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை பட்டியலின மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள, சீரங்கராயன் ஓடையைச் சேர்ந்தவர் கனகராஜ். கூலித் தொழிலாளி. அதே பகுதியில் வசித்து வந்தவர் வர்ஷினிபிரியா. இவர் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் காதலித்தனர். இவர்களது காதலுக்கு கனகராஜின் அண்ணன் … Read more

வெளிமாநிலத்தவரை சுட்டு கொன்ற சம்பவம்: ஜம்மு காஷ்மீரில் 6 இடங்களில் என்ஐஏ சோதனை

பஞ்சாப்பை சேர்ந்த இருவர் காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஜம்மு காஷ்மீரின் 3 மாவட்டங்களில் லஷ்கர் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ஜம்மு காஷ்மீரில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த யாராவது பணியாற்றினால், அவர்கள் குறிவைத்து கொல்லப்படுகின்றனர். பஞ்சாப்பைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், ரோஹித் மாசி ஆகியோர் ஸ்ரீநகரின் ஷாஹித் கன்ஜ் பகுதியில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி சுடப்பட்டனர். இதில் அம்ரித்பால் சம்பவ இடத்திலேயே இறந்தார். ரோஹித் மாசி மருத்துவமனையில் … Read more

பெண்கள் பாதுகாப்புக்கு செயலி​யுடன் இணைந்த காலணி: உத்தர பிரதேச மாணவர்கள் சாதனை

லக்னோ: பெண்​களின் பாது​காப்​புக்கு எஸ்ஓஎஸ் எச்சரிக்கை அனுப்பும் வகையில் காலணி ஒன்றை உத்தர பிரதேச மாணவர்கள் உருவாக்கி​யுள்​ளனர். பெண்​களின் பாது​காப்​புக்கு கடந்த 20 ஆண்டு​களில் பெப்பர் ஸ்பிரே, ரேப் விஷில், டாக்​சி​யில் எஸ்ஓஎஸ் பட்டன் என ஏராளமான பாதுகாப்பு பொருட்கள் அறிமுகப்​படுத்​தப்​பட்​டுள்ளன. தற்போது புதுமை கண்டு​பிடிப்பாக பாது​காப்பு அம்சத்​துடன் கூடிய செருப்பை பள்ளி மாணவர்கள் உருவாக்கி​யுள்​ளனர். உத்தர பிரதேசத்​தின் மகாராஜ்கன்ஜ் மாவட்​டத்​தில் உள்ள ஆர்பிஐ சி பள்ளி​யில் பயிலும் அம்ரித் திவாரி, கோமல் ஜெய்ஸ்​வால் என்ற மாணவர்கள் … Read more

சீன புத்தாண்டு : தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கோலாகல கொண்டாட்டம்…

உலகெங்கும் உள்ள சீன மக்கள் சந்திர புத்தாண்டை ஜனவரி 29ம் தேதி கொண்டாடி வருகின்றனர். டிராகன் ஆண்டிலிருந்து விடைபெற்று, பாம்பு ஆண்டு துவங்குவதை ஆசியாவில் உள்ள கோடிக்கணக்கான சீனர்கள் கொண்டாடி வருகின்றனர். சீனப் புத்தாண்டை முன்னிட்டு அந்நாட்டில் தொடர்ச்சியாக எட்டு நாட்கள் பொது விடுமுறை விடப்பட்டுள்ளதை அடுத்து மக்கள் உணவைப் பகிர்ந்து கொள்ளவும், பாரம்பரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், பட்டாசுகள் மற்றும் பட்டாசுகளை வெடிக்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. சீனா தவிர, தென் கொரியா, சிங்கப்பூர், வியட்நாம் … Read more

இஸ்ரோவின் 100-வது ராக்கெட் பயணம் வெற்றி: என்விஎஸ்-02 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது எப்படி?

சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100-வது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. அதில் அனுப்பப்பட்ட வழிகாட்டுதல் பயன்பாட்டுக்கான என்விஎஸ்-02 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்தியாவின் தரை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு’-ஐ (ஐஆர்என்எஸ்எஸ்) உருவாக்க இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக ரூ.1,420 கோடி செலவில் ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ, 1பி, 1சி, 1டி, 1இ, 1எப், 1ஜி என … Read more

கோடிக்கணக்கானோர் திரண்டதால் நெரிசல்: 30 பேர் உயிரிழப்பு – மகா கும்பமேளாவில் நடந்தது என்ன?

பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளாவில் புனித நீராடுவது மிகவும் புண்ணிய நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. வரும் … Read more

டீப்சீக், சாட்ஜிபிடி-க்கு போட்டியாக புதிய ஏஐ மாடலை அறிமுகம் செய்தது அலிபாபா

டீப்சீக்கின் ஏஐ, ஓப்பன்ஏஐ-யின் ஜிபிடி-4o மற்றும் மெட்டா நிறுவனத்தின் லாமா ஏஐ-க்கு போட்டியாக அலிபாபா நிறுவனம் தனது ஏஐ மாடலின் குவென்2.5- மேக்ஸ் என்ற புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அலிபாபாவின் கிளவுட் டிவிஷன் வெளியிட்ட அறிக்கையில்” ஓப்பன் ஏஐ, மெட்டா நிறுவனங்களின் ஜிபிடி-4o, லாமா 3.1-405பி, டீப்சீக்-வி3 ஆகிய ஏஐ மாடல்களுடன் ஒப்பிடும்போது குவென்2.5 -மேக்ஸ் செயல்பாடு மிகச் சிறப்பானதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது. டீப்சீக் நிறுவனம் தொடங்கி 20 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், … Read more

திமுக எம் பிக்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை இன்று நடந்த திமுக எம் பிக்கள் கூட்டத்தில் ஆளுநர் பதவி அர்சியல் மயமாவதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாக அரங்கில் இன்று நடைபெற்ற திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் (மக்களவை-மாநிலங்களவை) கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு: – ஆளுநருக்கு எதிராக தீர்மானம்:- தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஓர் அங்கம். ஆனால் அந்த அவையின் மரபை மதிக்கமாட்டார். சட்டமன்றம் நிறைவேற்றி … Read more

வகுப்பறையில் மாணவரை திருமணம் செய்து கொண்ட பேராசிரியை; வைரலான வீடியோ

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் ஹரிங்கடா பகுதியில் அமைந்துள்ள மவுலானா அபுல் கலாம் ஆசாத் பல்கலைக்கழகத்தில் வகுப்பறையில் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையிலான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியை ஒருவர், மாணவரை திருமணம் செய்து கொள்ளும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மணப்பெண் உடையணிந்து காணப்படும் அந்த பேராசிரியை, முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரை இந்து வங்காள முறைப்படி பல்வேறு சடங்குகளுடன் திருமணம் செய்து கொள்கிறார். … Read more