ஆசிய காது கேளாதோர் போட்டி : பதக்கம் வென்ற தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

சென்னை, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மலேசியாவில் நடைபெற்ற 10வது ஆசிய பசிபிக் காது கேளாதோர் போட்டி 2024-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனையர் வெவ்வேறு போட்டிகளில் 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள நம் வீரர் – வீராங்கனையரை குறிஞ்சி முகாம் அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து பாராட்டினோம். இந்திய நாட்டிற்கும், … Read more

அமெரிக்காவில் அரசு ஊழியர்களுக்கு 7 மாத ஊதியத்துடன் விருப்ப ஓய்வு – டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் 47-வது அதிபராக, குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் கடந்த 20-ந்தேதி பதவியேற்றார். அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து, நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை டிரம்ப் பிறப்பித்து வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் வகையில், ஊதிய பலன்களுடன் கூடிய விருப்ப ஓய்வு திட்டத்தை அரசு ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அரசின் மனிதவள நிறுவனமான பணியாளர் மேலாண்மை … Read more

குடியரசு துணை தலைவர் நாளை சென்னை வருகை

முட்டுக்காட்டில் நடைபெறும் காது கேளாதோர் – பார்வையற்றோர் தேசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நாளை சென்னை வருகிறார். மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின்கீழ் செயல்படும் தேசிய மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனம் சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் உள்ளது. இங்கு காது கேளாதோர் – பார்வையற்றோரின் 3-வது தேசிய மாநாடு நாளை (ஜன.31) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதன்மை விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் … Read more

முத்தலாக் கூறியதாக பதிவான வழக்குகளின் விவரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

முத்தலாக் கூறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நமது நாட்டில் முஸ்லிம் ஆண்கள், தங்களது மனைவிகளை முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் வழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் முத்தலாக் தடைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தச் சட்டத்தை எதிர்த்து கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த சமஸ்தா கேரளா ஜமாய்த்துல் உலேமா என்ற அமைப்பு உள்ளிட்ட 12 பேரின் மனுக்கள் … Read more

பாகிஸ்தானுக்கான அமெரிக்க நிதியுதவி நிறுத்தம்: அதிபர் ட்ரம்ப் உத்தரவின்படி நடவடிக்கை

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவிகளை தற்காலிகமாக நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானில் சர்வதேச மேம்பாட்டு திட்டங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்து வந்தது. பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள், தொல்லியல் ஆய்வு இடங்கள், அருங்காட்சியங்கள், உள்ளூர் மொழிகள் மற்றும் கைவினைத் தொழில்களை காக்க, கலாச்சார பாதுகாப்பு நிதியை பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் நிதி மூலம் வழங்கி வந்தது. இந்த நிதியை தற்காலிகமாக நிறுத்தவும், திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை மறு ஆய்வு செய்யவும் … Read more

டீப்சீக் ஏஐ சாட்போட் வெற்றிக்கு பின்புலமாக இருந்த லுவோ ஃபுலி யார்?

டீப்சீக் ஏஐ சாட்போட்டுக்கு உலகளவில் கிடைத்துள்ள வெற்றிக்கு பின்னால் 29 வயதான லுவோ ஃபுலி-யின் கடின உழைப்பு மிக முக்கியமானதாக இருந்தது தெரியவந்துள்ளது. சீனா உருவாக்கியுள்ள டீப்சீக் ஏஐ மாடலுக்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சாட்ஜிபிடி, ஜெமினி, கிளாட் ஏஐ போன்ற முன்னணி சாட்போட்களை பின்னுக்குத் தள்ளி டீப்சீக் சாட்போட் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதலிடத்தை பிடித்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இது, அமெரிக்க பங்குச் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் பல முன்னணி ஏஐ தொழில்நுட்ப … Read more

திருவண்ணாமலை கோவில் நிலத்தில் புதிய தர்கா அமைக்கப்படவில்லை : அரசு விளக்கம்

சென்னை தமிழக அரசு திருவண்ணாமலை கோவில் நிலத்தில் புதிய தர்கா ஏதும் அமைக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில நாட்களாக திருப்பரங்குன்றம் மலை தர்கா விவகாரம் கடும் புயலை கிளப்பியுள்ளது.   இதுவரிஅ அந்த விவகாரம் பற்றிய அனல் அடங்காத நிலை உள்ளது.  தற்போது புதிய சரச்சை ஒன்று கிளம்பி உள்ளது. அதாவது ”’திருவண்ணாமலை கோவிலுக்கு சொந்தமான கிரிவலப்பாதையில் புதிதாக தர்கா முளைத்துள்ளது. இப்போது தர்கா… அடுத்து வக்பு சொத்து… அடுத்து அந்த மலையே தர்காவுக்கு சொந்தம் … Read more

காதலியின் 4 மாத குழந்தையை கொலை செய்த 15 வயது சிறுவன் கைது

காந்திநகர், குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உள்ள உமர்கம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த முஸ்கான் அஸ்கரலி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, ஒரு குழந்தை இருந்துள்ளது. இந்த காதல் விவகாரம் சிறுவனின் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில், அவர்கள் சிறுவனை கண்டித்துள்ளனர். தனது காதலுக்கு குழந்தைதான் தடையாக இருப்பதாக நினைத்த சிறுவன், தனது காதலியின் 4 மாத குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதன்படி … Read more

முதல் டெஸ்ட்: கவாஜா, ஸ்மித் சதம்…ஆஸ்திரேலியா 330 ரன்கள் குவிப்பு

காலே, இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தலா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கியது . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார் … Read more