வங்காளதேசத்தில் ஊழியர்கள் போராட்டத்தால் முடங்கிய ரெயில் சேவை

டாக்கா, வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. இதன் முடிவில் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓடி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு மத்தியில் சம்பள உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்குள்ள ரெயில்வே ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே போராட்டக்காரர்களுடன் இடைக்கால அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. … Read more

வன்னியர் இடஒதுக்கீடு பற்றி அமைச்சருக்கு அரைகுறை புரிதல்: வழக்கறிஞர் கே.பாலு குற்றச்சாட்டு

விக்கிரவாண்டியில் வன்னியர் இடஒதுக்கீடு பற்றி மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதி குறித்து அரைகுறை புரிதல் உள்ள அமைச்சர் ராஜேந்திரனுக்கு தெரியவில்லை என்று பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பாமக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.பாலு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வரலாற்றில் வன்னியர்களுக்கு மிக அதிக துரோகம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்ற உண்மையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அம்பலப்படுத்தியதை சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரனால் தாங்கிக் கொள்ள … Read more

சயீப் அலிகான் தாக்குதல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

மும்பை: பாலிவுட் நடிகர் சயீப் அலி கானை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட 30 வயதான வங்கதேசத்தைச் சேர்ந்தவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவரின் போலீஸ் காவலை நீட்டிக்க புதிய காரணங்கள் எதுவும் இல்லாததால் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டது. சயீப் அலி கான் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த முகம்மது ஷரிஃபுல் இஸ்லாம் என்பவரின் போலீஸ் காவல் … Read more

ஈசிஆர் சாலையில் காரில் பெண்களை துரத்திய இளைஞர்கள் மீது வழக்கு பதிவு

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சொகுசு காரில் பெண்களை துரத்திச் சென்ற இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. நள்ளிரவில் சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிகழ்வு தொடர்பாக சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், 2க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒருகாரில் ஈசிஆர் சாலையில் நள்ளிரவு சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்த காரை தி.மு.க. … Read more

பெங்களூரு போலீசார் பறிமுதல் செய்த 150 வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்

பெங்களூரு, பெங்களூர் நகர காவல்துறை குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களையும் ஸ்ரீராம்புரா நிலையத்தில் உள்ள இரண்டு ஏக்கர் காலியான நிலத்தில் நிறுத்துவது வழக்கமாக இருந்தது,” இந்நிலையில் பார்க்கிங் செய்யப்பட்ட இடத்தின் ஒரு பகுதியில் காலை 11 மணியளவில் ஏற்பட்ட தீ, விரைவில் பார்க்கிங் இடத்தின் மறுபக்கத்திற்கும் பரவி, சுமார் 150 வாகனங்களை எரித்தது. அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு காவலர் பெருமளவில் புகை வருவதைக் கண்டு காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தார். … Read more

ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜெப் அலர்டிஸ் ராஜினாமா

துபாய் , 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது இந்த நிலையில்,சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜெப் அலர்டிஸ் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் … Read more

அணு ஆயுத உற்பத்தி மையத்தை ஆய்வு செய்த வடகொரிய அதிபர்

பியோங்யாங், வடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாண்டும் அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வருகிறது. மேலும், தங்கள் வசம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையிலும் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், வடகொரியாவில் உள்ள அணு ஆயுத உற்பத்தி மையத்தை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அணு ஆயுத உற்பத்திக்கு தேவையான யுரேனியம் செறிவூட்டலை மேலும் … Read more

`பெரியார் இல்லாமல் நமக்கு அரசியல் இல்லை!’ – சீமான் கருத்துக்கு இயக்குநர் பார்த்திபன் பதில்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீப நாட்களாக பொது வெளியில் பெரியார் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். அதற்கு பெரியாரிஸ்டுகளும், பெரியாரிய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு `பெரியார் குறித்து உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பெரியார் ஆதரவாளர்கள் சீமான் வீட்டை முற்றுகையிட்டனர். பெரியார் பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சுக்காக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், நீதிமன்றத்திலும் வழக்கு … Read more

பெட்ரோல் ஊற்றி எரித்ததில் சட்டக் கல்லூரி மாணவி காயம்: ரூ.6.75 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: திருச்சியில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவிக்கு ரூ.6.75 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகையைச் சேர்ந்த சுந்தர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ‘என் மகள் திருச்சி சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். என் மகளுக்கு தவச்செல்வம் என்பவர் காதல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். அவர் காதலை ஏற்க என் மகள் மறுத்துவிட்டார். இந்நிலையில் தவச்செல்வம் என் மகள் மீது பெட்ரோல் ஊற்றி … Read more