“நான் குடிப்பதும் யமுனை நீர்தான்!” – பிரச்சாரத்தில் கேஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி பதிலடி
புதுடெல்லி: யமுனை நதியை ஹரியானா விஷமாக்கி விட்டது என்ற டெல்லி முன்னாள் முதல்வர் கேஜ்ரிவாலின் பேச்சுக்கு பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார். மேலும், “நான் உட்பட டெல்லியில் உள்ள அனைவரும் ஹரியானா அனுப்பும் யமுனை நீரைத்தான் குடிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். டெல்லியின் கர்தார் நகரில் நடந்த பேரணிக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், “டெல்லியின் முன்னாள் முதல்வர் ஒருவர் ஹரியானா மக்கள் மீது அருவருக்கத்தக்க குற்றச்சாட்டினைச் சுமத்தியுள்ளார். தோல்வி பயத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் … Read more