100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை- பிரதமர் மோடி வாழ்த்து

ஸ்ரீஹரிகோட்டா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று தனது 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஜிஎஸ்எல்வி-எப்15 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் இன்று காலை 6.23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து ஏவப்பட்டது. என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் தரை,கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியமான தகவலை தெரிவிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது குறித்து பிரதமர் மோடி … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து; நார்த் ஈஸ்ட் யுனைடெட் – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

புதுடெல்லி , 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. அதன்படி இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் – ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 6வது இடத்திலும், ஐதராபாத் … Read more

இந்திய-அமெரிக்க நாடுகளின் கூட்டு தயாரிப்பு நான் – சத்யா நாதெல்லா பேச்சு

நியூயார்க், அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள இந்திய துணை தூதரகம் சார்பில் இந்தியாவின் 76-வது குடியரசு தின விழா, பெல் ஹார்பர் மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில் வாஷிங்டன் மாகாண கவர்னர் பாப் பெர்குசன், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சத்யா நாதெல்லா பேசுகையில், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் பிணைப்பின் தயாரிப்பு நான். கல்வி விளைவுகள், சுகாதாரம், பொது சேவை செயல்திறன், போட்டித்தன்மை மற்றும் சிறு … Read more

TVK :'விஜய்யின் சென்டிமென்ட்; புதிய நிர்வாகி சஸ்பென்ஸ்; அலப்பறை கொடுத்த மா.செ' – பனையூர் அப்டேட்ஸ்

தவெக கட்சியின் இரண்டாம் கட்ட மா.செக்கள் கூட்டத்தை நடத்தி மேற்கொண்டு 19 மா.செக்களை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் விஜய். பனையூரில் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கும் விஜய் கட்சி மீட்டிங்கின் முக்கிய அப்டேட்ஸ் இங்கே. TVK கடந்த 24 ஆம் தேதி முதற்கட்டமாக விஜய் மா.செக்களை சந்தித்த போது கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரத்தை அவர்களுடன் செலவிட்டார். கொஞ்சம் பொறுமையாகவே அத்தனை பேர் சொல்வதையும் கேட்டு வாழ்த்து சொல்லி ஸ்வீட் கொடுத்து அனுப்பியிருந்தார். ஆனால், இன்று மதியம் 1:50 மணிக்கு … Read more

தவெக தலைவர் விஜய் உடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு – பின்னணி என்ன?  

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யயை விசிக முன்னாள் நிர்வாகியும், ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ நிறுவனத்தை நடத்துபவருமான ஆதவ் அர்ஜுனா சந்தித்துப் பேசினார். இதையடுத்து, தவெகவுடன் அவர் விரைவில் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் அடுக்குமாடி குடியிருப்பில் அவரையும், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்தையும் ஆதவ் அர்ஜுனா புதன்கிழமை சந்தித்து பேசினார். அப்போது ஆதவ் அர்ஜுனாவின் தனியார் நிறுவனத்துடன் தவெக ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும், அவருக்கு தவெகவில் … Read more

மகா கும்பமேளாவில் 30 பேர் பலி: கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி? – உ.பி காவல் துறை விளக்கம்

பிரயாக்ராஜ்: பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மவுனி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலைக்கு முன்பு 1 – 2 மணி அளவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக உத்தரப் பிரதேச காவல் துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 5 பேரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் கும்பமேளா டிஐஜி வைபவ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் புனித … Read more

“இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு தவறுதலாக நடந்துவிட்டது” – இலங்கை கடற்படை தளபதி

கொழும்பு: காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு தவறுதலாக நடந்த ஒன்று என இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகோட தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியர்கள் மீது இலங்கை கடற்படை வேண்டும் என்று துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. இலங்கை கடற்பகுதியில் இந்திய மீன்பிடி இழுவைப்படகு ஒன்றைக் கண்ட கடற்படை வீரர்கள், அந்தப் பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினர். அதற்கு அவர்கள் இணங்காததால், சந்தேகம் காரணமாக அவர்களை கடற்படை வீரர்கள் … Read more

வகுப்பறையில் மாணவனை திருமணம் செய்து கொண்ட ஆசிரியை! வைரல் வீடியோ..

Viral Video Of A Lecturer Marrying Her Student : சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு ஆசிரியை தனது மாணவனை திருமணம் செய்து கொள்வது போல பதிவாகியிருக்கும் காட்சிகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

ஒரு டைட்டிலுக்கு அக்கப்போரா? மாறி மாறி சண்டையிடும் சிவகார்த்திகேயன் – விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கும், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கும் பராசக்தி என்று தலைப்பு வைத்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவரும் சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.

Parasakthi: "சமூகநீதியை பேசிய சரித்திர படம் 'பராசக்தி'; அதை சிவகார்த்திகேயன்…"- AVM வாழ்த்து

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓ.டி.டி-யில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இவர் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா மூவரையும் வைத்து தனது அடுத்தப் படத்தை இயக்குகிறார். சிவகார்த்திகேயனின் ’25’ படமும், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100வது திரைப்படமுமான இப்படத்திற்கு ‘பராசக்தி’ என பெயரிடப்பட்டுள்ளது. இன்று வெளியாகியிருக்கும் ‘SK 25’ டைட்டில் டீசரில் இதன் டைட்டில் அதிகாரபூர்வமாக வெளியானது. இதில் சிக்கல் என்னவென்றால், விஜய் ஆண்டனி நடிக்கும் ‘சத்தித் திருமகன்’ … Read more