சென்னையில் இன்று கூடுதல் பேருந்துகள் இயக்கம்

சென்னை சென்னையில் இன்று மின்சார ரயில் ரத்தை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் ””05.01.2025 அன்று தாம்பரம் ரெயில் நிலையத்தில் புதிய நடைமேம்பால பணிகள் நடைபெற இருப்பதால் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் ரயில்கள் பல்லாவரம் வரையும், அதேபோல் செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் காலை 11 மணி முதல் மாலை 4 வரை செங்கல்பட்டிலிருந்து … Read more

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: வேங்கைவயல், அண்ணா பல்கலை. வன்கொடுமை விவகாரங்களை கிளப்புகிறது விசிக

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில், வேங்கைவயல், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கான கோரிக்கைகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் நாளை (ஜன.6 திங்கள் கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். நேற்று முன்தினம் ராஜ்பவனுக்கு, பேரவைத் தலைவர் மு.அப்பாவு மற்றும் … Read more

உ.பி.யில் திருந்தி வாழ முன்வந்த 60 குற்றவாளிகள்: பெரோஸாபாத் நகர எஸ்.பி. முன்னிலையில் உறுதிமொழி

உத்தர பிரதேசத்தின் ரசூல்பூர் காவல் நிலையத்தில் 60 குற்றவாளிகள் திருந்தி வாழ்வதாக உறுதி மொழி எடுத்துள்ளனர். அப்போது அவர்கள், தாங்கள் செய்த குற்றங்களை மன்னிக்க வேண்டும் எனவும், இனி அதை செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்தனர். பல்வேறு வித்தியாசமான கிரிமினல் குற்றங்களுக்கு பெயர்போனதாக உ.பி. கருதப்படுகிறது. இந்த அவப்பெயரை போக்கச் செய்யும்படி அதன் 75 மாவட்டங்களின் காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதனால், தொடர்ந்து கிரிமினல்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. … Read more

திருப்பாவை – பாடல் 21  விளக்கம்

திருப்பாவை – பாடல் 21  விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.  இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவது என்பது மிகவும் விசேஷம். அது அவர்களுக்கு நல்ல கணவனை பெற்றுத் தரும். அந்தவகையில், மார்கழி மாதத்தின் 21 … Read more

ஃபெஞ்சல் புயல் தீவிர இயற்கை பேரிடர்: அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

ஃபெஞ்சல் புயலை தீவிர இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்து, அரசிதழில் வெளியிட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. நீர்வரத்து அதிகரித்து சாத்தனூர் அணையில் அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டதால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின. கனமழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மண் சரிவு … Read more

கர்நாடகாவில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிஎஸ்பி கைது

கர்நாடகாவில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் துறை டிஎஸ்பி கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள ம‌துகிரியின் காவல் துறை துணை கண்காணிப்பாளராக இருப்பவர் ராமச்சந்திரப்பா (50). கடந்த வாரம் மதுகிரியைச் சேர்ந்த 36 வயதான பெண் ராமசந்திரப்பாவை காவல் நிலையத்தில் சந்தித்து நிலத் தகராறு தொடர்பான புகாரை அளித்தார். அப்போது அவர் அந்த பெண்ணை தனது ஓய்வறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இந்த சம்பவத்தின் … Read more

217 டிசைனர் கைப்பைகள், 75 ஆடம்பர வாட்சுகள்: தாய்லாந்து பிரதமரின் சொத்து மதிப்பு ரூ.3,430 கோடி

தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு 13.8 பில்லியன் பாட் (அமெரிக்க டாலரில் 400 மில்லியன்-இந்திய மதிப்பில் ரூ.3,430 கோடி) சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் கரன்சியில் 1 பாட் என்பது இந்திய மதிப்பில் ரூ. 2.48 ஆகும். தாய்லாந்தின் தேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (என்ஏசிசி) அந்நாட்டு பிரதமர் தனது சொத்து பட்டியலை தாக்கல் செய்துள்ளார். இதனை அவரது பியூ தாய் கட்சி உறுதி செய்துள்ளது. அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளதாவது: தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு 13.8 … Read more

தொழில்முனைவோருக்கான ஒரு நாள் ‘ChatGPT’ பயிற்சி வகுப்பு! தமிழ்நாடு அரசு ஏற்பாடு

சென்னை: தொழில்முனைவோருக்கான ஒரு நாள் ‘ChatGPT’ பயிற்சி வகுப்பை தமிழ்நாடு அரசு வரும் 25ந்தேதி நடத்துகிறது. இதில், விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை தமிழக மக்களும் அறிந்து கொள்ளும் வகையில்,  தமிழ்நாடு அரசு சார்பில், அவ்வப்போது பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக,   “தொழில்முனைவோருக்கான ChatGPT” ஒரு நாள் பயிற்சி வகுப்பு வரும் 25–ந் தேதி தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் நடைபெநுபிநது. சென்னை தொழில்முனைவோர், … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான 3 பெண்களை விடுவிக்க கோரிய மனுக்களை விசாரிக்க முடியாது: நீதிமன்றம் மறுப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஞ்சலை உள்ளிட்ட 3 பெண்களை விடுவிக்கக் கோரிய மனுக்கள் மீது, தற்போதைய நிலையில் விசாரணை நடத்த முடியாது என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்பட 29 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். … Read more

டெல்லியில் கேஜ்ரிவாலை எதிர்த்து பாஜகவின் பர்வேஷ் வர்மா போட்டி

வரும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதில், டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியைப் பொருத்தவரையில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் கடும் போட்டி இருக்கும் என தெரிகிறது. இதற்கு … Read more