காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு: 13 பேர் சிறைபிடிப்பு – என்ன நடந்தது?

புதுடெல்லி / காரைக்​கால்: காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 மீனவர்கள் காயம் அடைந்தனர். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கவேல்(39), தினேஷ் (30), காரத்திகேசன்(27), செந்தமிழ் (27), பட்டினச்சேரியை சேர்ந்த மைவிழிநாதன்(22), வெற்றிவேல் (28), … Read more

செயலிகள் மூலம் 34 சதவீதம் பேர் மோசடி நபர்களிடம் பணத்தை இழக்கின்றனர்

பணம் செலுத்தும் செயலிகள் மூலமாக, நாட்டில் மூன்றில் ஒரு பகுதியினர் மோசடி நபர்களிடம் பணத்தை இழப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. எப்ஐசிஓ என்ற தனியார் ஆய்வு நிறுவனம் ஆன்லைன் மோசடிகள் குறித்து கடந்தாண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்தியாவில் சுமார் ஆயிரம் இளைஞர்களிடமும், 14 நாடுகளைச் சேர்ந்த 11,000 பேரிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது குறித்து எஐசிஓ இ நிர்வாக இயக்குனர் தத்து கோம்பல்லா கூறியதாவது: பணம் செலுத்தும் செயலிகள் மூலமாக நடைபெறும் மோசடிகள் இந்தியாவில் அதிகரித்து … Read more

பிரதமர் மோடி பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகவல்

பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரியில் என்னை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வருவார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறினார். குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் கடந்த 20-ம் தேதி இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றார். அப்போது முதல் பல்வேறு அதிரடி உத்தரவுகளை அவர் பிறப்பித்து வருகிறார். ட்ரம்ப் நேற்று முன்தினம் புளோரிடாவில் இருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் வாஷிங்டனுக்கு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர … Read more

DeepSeek AI மாதிரிக்கே உலகளவில் பங்குச் சந்தைகளில் தொழில்நுட்ப நிறுவன பங்குகள் கடும் பாதிப்பு

சீனாவின் குறைந்த விலை செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரி DeepSeek R1 வெளியீட்டை அடுத்து உலகளவில் இன்று (ஜன. 28) பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. DeepSeek AI சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கான “விழிப்புணர்வு அழைப்பு” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த AIக்கு அதிகரித்து வரும் மவுசை அடுத்து உலகளவில் தொழில்நுட்ப பங்குகளை விற்பனை செய்வதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், அமெரிக்க பங்குச் சந்தை மட்டுமன்றி, டோக்கியோ, ஆம்ஸ்டர்டாம் மற்றும் … Read more

பிரயாக்ராஜ் செல்லும் ரெயில்களில் கதவுகள், ஜன்னல்கள் அடைப்பு; பயணிகள் கொந்தளிப்பு

பிரயாக்ராஜ், உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், மத்திய பிரதேசத்திற்கு உட்பட்ட சத்தார்பூர் மற்றும் ஹர்பால்பூர் ரெயில் நிலையங்களில் நேற்றிரவு பிரயாக்ராஜ் நகருக்கு செல்லும் ரெயில்கள் சென்றன. ஆனால், மேற்குறிப்பிட்ட 2 ரெயில் நிலையங்களுக்கு வந்து சேர்ந்த ரெயில்களில் பயணித்த நபர்கள் ரெயில்களின் கதவுகளை பூட்டி கொண்டனர் என கூறப்படுகிறது. இதனால், நடைமேடையில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் ரெயில் கதவை திறக்க கோரி கூச்சலிட்டனர். அப்போதும் கதவு … Read more

3-வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

ராஜ்கோட், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், சென்னையில் நடந்த 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணையின் கேப்டன் … Read more

இந்திய மீனவர்கள் 13 பேருக்கு பிப்ரவரி 10 வரை நீதிமன்ற காவல் – இலங்கை கோர்ட்டு உத்தரவு

கொழும்பு, காரைக்கால், நாகை மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த 13 மீனவர்கள் நேற்று இரவு கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களை சுற்றி வளைத்தனர். இதைத் தொடர்ந்து மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், படகில் இருந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 2 மீனவர்கள் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. மீனவர்களின் விசைப் படகை … Read more

விடாத ஊழியர்கள்.. மீண்டும் பறந்த மெயில்.. பணிந்தது கோவை ஐடி நிறுவனம்..!

கோவை ஆர் எஸ் புரம் மற்றும் சுங்கம் பகுதிகளில் ‘Focus Edumatics’ என்ற தனியார் ஐடி நிறுவனம் இயங்கி வந்தது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஐடி நிறுவனத்துக்கு பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கிளைகள் உள்ளன. கோவையில் உள்ள இரண்டு கிளைகளில் சுமார் 2,000 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். கோவை ஐடி ஊழியர்கள் இந்நிலையில் அந்த நிறுவனம் கடந்த சனிக்கிழமை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தங்களது நிறுவனத்தின் செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதாக கூறி ஊழியர்களுக்கு மெயில் அனுப்பியுள்ளனர். ஊழியர்கள் … Read more

பஞ்சாப்பில் தாக்குதலுக்கு உள்ளான கபடி வீராங்கனைகள் சென்னை திரும்பினர்: உதயநிதி தலையீட்டால் நிலைமை சீரானதாக தகவல்

பஞ்சாப்பில் நடந்த கபடி போட்டியில் நடுவர்கள் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாகவும், எதிரணியினரால் தாக்கப்பட்ட நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தலையீட்டால் பாதுகாப்பு கிடைத்ததாகவும் சென்னை திரும்பிய கபடி வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகங்களுக்கு இடையே பெண்களுக்கான கபடி போட்டி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருகாசி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து அழகப்பா, பெரியார் மற்றும் அன்னை தெரசா பல்கலைக்கழகங்களின் சார்பில் 3 அணிகள் பங்கேற்றன. இதில் அன்னை தெரசா பல்கலைக்கழக அணிக்கும், பிஹார் மாநிலம் … Read more

மூலப்பொருட்கள் ஏற்றுமதியை ஏற்க முடியாது; மதிப்பு கூட்டல் இந்தியாவில் நடக்க வேண்டும்: பிரதமர் மோடி

புவனேஸ்வர்: இந்தியாவில் இருந்து மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதும், வெளிநாடுகளில் மதிப்புக்கூட்டப்பட்டு பின் அவற்றை இந்தியாவுக்கு அனுப்புவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மதிப்பு கூட்டல்கள் இந்தியாவில் நடக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரின் நடைபெற்ற ‘மேக் இன் ஒடிசா’ மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “கிழக்கு இந்தியாவை நாட்டின் வளர்ச்சி இயந்திரமாகக் கருதுகிறேன். அதில் ஒடிசா முக்கிய பங்கு வகிக்கிறது. மூலப்பொருட்களை ஏற்றுமதி … Read more